தூத்துக்குடி
பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழிற்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சாரதி, துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், நைஸ்பரமசிவம், மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, தொழிலாளரணி துணைத்தலைவர் செந்தில்குமார், சிறுபாண்மை அணி தலைவர் செய்யதுகாசிம், துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், பாலன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பொன்ராஜ், சதீஷ்குமார், கங்காராஜேஷ், செல்வராஜ் சுரேஷ்மகாராஜா, கவுன்சிலர்கள் விஜயகுமார், நாகேஸ்வரி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ஆறுமுகம், ரெக்ஸ்லின், ராஜதுரை, அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், கந்தசாமி, தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, வேல்முருகன், வட்டப்பிரதிநிகள் பாஸ்கர், துரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மணி அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முனியசாமி, செயலாளர் முருகன், மற்றும் சக்திவேல், பொன்ராஜ், பால்ராஜேந்திரன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

