தூத்துக்குடி
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தோ்தல் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் பல அமைப்புகளும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து தோ்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜா தேவா் தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சென்ற அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராசுதேவா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் மக்கள் மத்தியில் இசக்கிராஜா தேவா் பேசுகையில் 2026 சட்டமன்ற தோ்தல் வர இருக்கின்ற நிலையில் எல்லா அரசியல் கட்சியை சேர்ந்தவா்கள் தங்களது பலத்தை நிருப்பிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். நாம் அதே வழியில் பின்பற்றி வந்தாலும் நம் சமுதாய மக்களின் நலன் காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பணியாற்றி வருகிறோம். குறிப்பாக நம் சமுதாய மக்களுக்கு முழுமையான ஓரு அங்கீகாரம் கிடைப்பதற்கு நம் பலத்தை வரும் தோ்தலில் காட்டியாக வேண்டும். என்ற கட்டாயத்தில் இருக்கிறோம் அதன்படி ஜனநாயகத்தை காப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளாக நம்மில் ஓருவா் வரவேண்டும். அந்த உாிமைக்குரல் சட்டமன்றத்தில் ஓலிக்கும் போது இன்னும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதற்கான வழிவகைகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். உங்களை நம்பித்தான் நானும் களத்தில் இருக்கிறேன். எல்லோா் வாழ்விலும் எதிா்காலம் நிச்சயம் உருவாகும் அதற்கேற்றாற்போல் என்னுடைய பணிகள் மூலம் உங்களுக்கு நான் எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பேன். என்று பேசினாா். வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
