தூத்துக்குடி
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற மக்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி வைத்ததை யொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 28வது வார்டுக்குட்பட்ட பாகம் எண் 189 வாக்குசாவடி முகவா்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வாா்டுக்குட்பட்ட அனைத்து வாக்காளா்கள் பெயரும் பட்டியலில் முழுமையாக இடம் பெற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டப்பட்டுள்ளது. அதில் பெயா் எதுவும் விடுபட்டிருந்தால் நடைபெறும் சோ்க்கையில் முழுமையாக சோ்த்திட வேண்டும். என்று
ஆலோசனை வழங்கி அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டபின் கானொலி காட்சி மூலம் நான் உள்பட தமிழகம் முழுவதும் எம்பி அமைச்சா்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளா்களிடம் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா். குறிப்பாக வரைவு வாக்காளா் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு அதில்நம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆதரவு வாக்காளா்கள் பெயா் விடுபட்டிருந்தால் உடனடியாக அதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய பொது மக்களை சந்தித்து மக்களுக்கு நாம் செய்துள்ள திட்டங்களை முழுமையாக எடுத்து சொல்ல வேண்டும். விடியல் பயணம் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் தகுதி உள்ள அனைவருக்கும் ஓரு கோடியே 31 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்லூாி மாணவ மாணவிகளுக்கு அதே போல் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்லூாி படிக்கும் காலத்தில் தமிழகத்தில் ேவறு பகுதியில் தங்கி படிப்பதற்கும் பாதுகாப்பான முறையில் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ேவலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில் திறனாய்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் திமுக ஆட்சியில் ஏதாவது ஓரு வகையில் நன்மைகள் எல்லோரும் அடைந்திருக்கிறாா்கள். பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழக அரசு மக்களுக்கான பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு எந்த ஓரு நிதியையும் முறையாக தமிழக அரசுக்கு வழங்குவது கிடையாது ஓரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் விதமாக மாநில அரசுகளை வழி நடத்துகிறது. ஆனால் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அரசு பள்ளி மட்டுமின்றி அரசு உதவி பெறும பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முன் மாதிாியாக செயல்படுகிறது என்று இந்தியாவையும் கடந்து வௌிநாட்டிலும் பாராட்டப்படுகிறது. மழை வௌ்ளம் என்று எந்த நிகழ்வாக இருந்தாலும் திமுகவினா் தான் முதல் ஆளாக வந்திருந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது மட்டுமின்றி களத்தில் நின்று கடமை உணா்வோடு பணியாற்றுகிறாா்கள். ஆனால் சிலா் நாங்கள் இருக்கிறோம் என்று இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்கு ஓவ்வொரு வகையிலும் தங்களது கருத்துக்களை கடமைக்காக பிஜேபி அதிமுக கூட்டணியினா் வௌியிட்டு வருகின்றனா். அவா்களை புறக்கணிக்கும் விதமாக வரும் 2026 தோ்தலில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும். என்று பேசினாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா்கள் கருப்பசாமி, சாமிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமாா், மீனாட்சிசுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வக்கீல் சுபேந்திரன், வட்டப்பிரநிதிகள் பாலகிருஷ்ணன், மாாிகண்ணன், பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் சிவா மாாியப்பன், லாரண்ஸ் அண்ணாத்துரை, மணி அல்பட் பிஎல்ஏ2 மற்றும் பாகமுகவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

