சென்னை மாநகர காவல் ஆணையர் AKV அவர்களின் அதிரடி உத்தரவு!!
மின்னல் வேகத்தில் நிறைவேற்றும் திருமங்கலம்
ஆய்வாளர் ரவி 
————————
சென்னை முழுவதும் காவல் ஆணையாளா், திரு.கா.
விஸ்வநாதன் அவர்கள் உத்தரவின் பேரில்,144 தடை உத்தரவு ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டம் என்பது சென்னையில் அதிகரித்து காணப்படுவதாக அரசுக்கு தெரிய வந்ததால்.
இரு சக்கர வாகனம் மற்றும் அத்தியாவசிய பொருள்கள்
வாங்குவதாக பெருகிவரும் நடமாடத்தை கட்டுபடுத்தும் விதமாக அனைத்து காவல் நிலையங்களும் வாகன சோதனைகளை முடுக்கிவிட்டனா். அங்காங்கே தேவை இல்லாமல் சுற்றியவா்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன ,
அதன் தொடா்ச்சியாக அண்னாநகர் சரக துணை ஆணையர் முத்துசாமி அவர்கள் உத்தரவின் பேரிலும் மற்றும் உதவி ஆணையர் சிவக்குமார் மேற்பார்வையிலும் திருமங்கலம் ஆய்வாளா்
திரு ரவி அவா்கள் தலைமையில் , தீவிரமான வாகன சோதனை நடைபெற்றதோடு மட்டுமல்லாமல் நிறைய இடங்களில் பிரதான சாலைகளில் பேரிகாடு Barricade அமைத்தும் ,விழிப்புணா்வு முகாம் நடத்தியும், மக்கள் நடமாடத்தை வெகுவாக குறைத்து வருகிறாா் மேலும் வெளிமாநிலத்து இளைஞா்களுக்கு உணவும் கொடுத்து உதவி செய்கிறாா் என்பது காவல் துறை மக்களின் நண்பன் என்று நிரூபித்து உள்ளாா் . மக்கள் அநாவசியமாக வெளியில் வரவேண்டாம் என கேட்டு கொண்டாா் . “காவலா் ஆய்வாளாரை சந்திக்க சிபாரிசு தேவை இல்லை என்றும் மக்கள் உயிரை காக்கும் பணியின் போது யாருடைய சிபாரிசையும் எடுத்து கொள்வது இல்லை என்றும் பொது மக்கள் எந்தவித உதவிக்கும் காவல் துறையினர் ஆன எங்களை எந்த நேரத்திலும் அணுகலாம் எந்த நேரமும் காவல் துறை பொது மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளோம்
என்பதை தெரிவித்து உள்ளார்.
காவல் ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை உடனே நிறைவேற்றும் வகையில் அனுமதி இன்றி சுற்றி திரிந்த இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார் தனது அதிரடி ஒரு பக்கம் மற்றொரு பக்கம் தனது மனித நேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்குவது என பல நல்ல காரியங் களை செய்து வரும் திருமங்கலம் ஆய்வாளர் ரவி அவர்களை பொது மக்கள் மனதார பாராட்டிவருகிறார்கள் ஆணையர் AKV அவர்களின் குட் புக்கில் இருக்கும் ஆய்வாளர் ரவி அவர்களுக்கு
போலீஸ் செய்தி TV
சார்பாக மனதார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

