நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.
தூத்துக்குடி, டிச, 19

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி தேவனுடைய வீட்டில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி கொடுத்தார். தொடர்ந்து மோகன் சி லாசரஸ், மனைவி ஜாய்ஸ் லாசரஸ், ஊழிய துறைத்தலைவர் ஆஸ்லி மிராக்கள், தகவல் தொழில்நுட்ப தலைவர் கிளெமெண்ட் எபிநேசர் ஆகியோர் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாலிபர்கள், சிறுவர்கள், மூதாட்டிகள், மாற்றுத்திறனாளி பெண்கள், இளம்பெண்கள், சிறுமிகள் உட்பட மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு புத்தாடைகளை வழங்கினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு வீல்சேர், ஊன்றுகோல் மற்றும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அனைவருக்கும் மதிய உணவும், மாலையில் சிற்றூண்டியும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்களும், புதுவாழ்வு சங்க குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
