தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!
தூத்துக்குடி, டிச,19



தூத்துக்குடி மாநகர் முழுவதும் ஆபாச சினிமா வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.இது நகரின் முக்கிய பகுதிகள் பள்ளி கல்லூரி, பகுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்த ஆபாச சினிமா வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் இதனை ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மாணவிகள் பார்த்து முகம் சுளிக்கும் சூழ்நிலை உருவானது. இதனை அறிந்த தூத்துக்குடி தவெக மாநகர தேர்தல் பிரிவு செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆனந்தகுமார் தலைமையில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள், கருப்பு பெயிண்ட் கொண்டு மாநகரின் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்ட ஆபாச வால் போஸ்டர்களை கருப்பு மை பூசி அழித்தனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவிக்கையில் சினிமா போஸ்டர் என்ற பெயரில் இது போன்ற ஆபாச போஸ்டர்கள் திரையரங்குகள் சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு நிர்வாகம்் உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அருவருக்கத் தக்க செயலால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் முகம் சுளிக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது ஆகையால் இது போன்ற ஒரு நிகழ்வு இனி நடைபெறாத வண்ணம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார் . தமிழக வெற்றி கழகத்தினர் செய்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்து பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மனதார பாராட்டியதோடு இதனை முன் நின்று செய்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது மாநகர தமிழக வெற்றிக் கழக பகுதி செயலாளர்கள் சந்தனராஜ், ராஜா, 9வது வார்டு வட்டச் செயலாளர் அஸ்வின் குமார், 6வது வார்டு வட்டச் செயலாளர் பொன்வேல், மாநகர நிர்வாகிகள் பாலா, பொன்ராஜ் உட்பட ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

