தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!
தூத்துக்குடி டிச, 8


தூத்துக்குடி தாலுகா, பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிக நிறுவனம் நடத்தி வந்த பிரேம்நாத், பிரவீன் ஆகிய சகோதரர்கள் இன்வெட்டர் பேட்டரி வாட்டர் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். மேற்படி கிராமத்தில் மற்றொரு மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பாண்மையாக வசித்து வருகின்றனர். மேற்படி கிராமத்தில் பிரேம்நாத், பிரவீன் ஆகிய சகோதரர்கள் மட்டுமே மற்றொரு சமுதாயத்தை சார்ந்தவராக வசித்து வருகிறார்கள் இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் சிலர் பிரேம்நாத், பிரவீன் ஆகியோர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பிறகும், சிப்காட் காவல்நிலையத்தார் சட்டப்படி அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அஸ்வீன், பரத், முத்தமிழ் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மீது எந்தவித குற்ற வழக்கும் பதிவு செய்யாமல் அதற்கு மாறாக பண்டாரம்பட்டி ஊர் பெரியவர் மூலம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட சகோதரர்கள் குடும்பத்தை பி.சி.ஆர் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டியும் சமாதானம் பேசி அந்த நேரத்தில் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் துணிச்சலுடன் வலம் வந்த மேற்கண்ட கும்பல் இதன் தொடர்ச்சியாக, மேற்படி கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா போதை ரவுடி கும்பல்கள் 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கஞ்சா மற்றும் மது போதையில் அஸ்வின், பரத், முத்தமிழ் ஆகியோர் தலைமையில் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய சிலருடன் சேர்ந்து மேற்கண்ட அந்த சகோதரர்கள் குடும்பத்தை இந்த ஊரை விட்டு விரட்ட வேண்டும் என பேசிக்கொண்டு கும்பலாக ஊர் எல்லையில் சந்தன மாரியம்மன் கோவில் முன்பு நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக பிரேம்நாத் மற்றும் பிரவீன் ஆகியோர்களை பார்த்து அஸ்வின், பரத், முத்தமிழ் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய நபர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, இன்னும் ஊரை விட்டு காலி செய்ய வில்லையா? உங்க வீட்டை எங்க ஜாதிக்காரனுக்குத் தான் விற்கணும். எங்களுக்கு மாதாமாதம் மாமுல் கொடுக்கனும், எனக் கூறி பிரவீன், பிரேம்நாத், அவரது நண்பர் அசோக்குமார் ஆகியோர்களை அரிவாள் மற்றும் கொடிய ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். உடனே, டிஎஸ்பி-க்கு போன் செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகும், சிப்காட் காவல்நிலையத்தார். சட்டப்படி முறையாக முதலில் குற்ற வழக்கு பதிவு செய்யவில்லை. பல்வேறு அமைப்புகள் சங்கங்களின் அழுத்தம் காரணமாக எளிதில் ஜாமீன் கிடைக்கக் கூடிய பிரிவுகளை போட்டு கிரைம் நம்பர் 746/2025 என்ற குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி வழக்கு பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.சிப்காட் காவல்நிலையத்தார் எளிதில் ஜாமீன் கிடைக்கக் கூடிய பிரிவுகளை போட்டு கிரைம் நம்பர் 746/2025 என்ற குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், முறையாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்து மேலும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்யாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதால், மேற்கண்ட அஸ்வின், பரத், முத்தமிழ் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய நபர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்று விட்டனர்.ஏற்கனவே வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டி கடனை அடைக்க முடியாமலும், வியாபாரத்தை செய்ய முடியாமலும் மேற்கண்ட ஜாதி வெறி கொண்ட ரவுடிகளுக்கு பயந்து பிரேம்நாத், பிரவீன் ஆகியோர்கள் உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் கேள்வி குறியாகிவிட்டது.எனவும் தவறு இழைத்த குற்றவாளிகள் மிகத் துணிகரமாக, சிப்காட் காவல்நிலையம் முன்பே எளிதில் முன்ஜாமீன் பெற்று வெளியே உலாவி வருவதாலும், மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மற்றும் சில ரவுடிகள் பெயரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமலும், சிலர் வழக்கை வாபஸ் வாங்க வற்புறுத்தி பிரேம்நாத் குடும்பத்தை மிரட்டி உள்ளனர். இவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யாமலும், விசாரணை முழுமை பெறாமல் இருப்பதால், சிசிடிவி ஆதாரங்களை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு யாரேனும் அழித்து விடக்கூடாது . இந்த விஷயத்தில் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் இதன் மூலம் மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் வணிகர்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய ஜாதிக்கலவரம் நடத்த மேற்கண்ட பண்டாரம்பட்டியில் உள்ள சில ரௌடிகள் முயற்சி செய்து வருகிறார்கள் எனவும் இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.எனவும் எப்ஐஆர் நம்பர் 746/2025-யில் கொலை முயற்சி சட்டப்பிரிவை சேர்க்க வேண்டும் என்றும், மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சில நபர்களை அருகில் உள்ள சிசிடிவி-யை ஆராய்ந்து புலன் விசாரணை செய்து கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட வணிக குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு, பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு தமிழ்நாடு நாடார் பேரவை, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, பனங்காட்டு மக்கள் கழகம், தமிழ்நாடு நாடார் சங்கம், காமராஜர் லட்சிய பேரவை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் இணைந்து கூட்டாக 24.11.2025-ம் தேதியன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர கேட்டனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட குற்ற வழக்கை கொலை முயற்சி வழக்காக மாறுதல் செய்தும் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வணிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி கலவரம் போல் மாறிவிடக்கூடாது என பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கை மனுவின் உண்மைத்தன்மை ஆராய்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரடி பார்வையில், தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் மதன் அவர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து வணிகர்களை தாக்கிய குற்றவாளிகள் அனைவரையும் வழக்கில் சேர்த்து அதில் பல முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். காவல்துறை எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் ஜாதி மோதல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால்
தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு, பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு தமிழ்நாடு நாடார் பேரவை, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, பனங்காட்டு மக்கள் கழகம், தமிழ்நாடு நாடார் சங்கம், காமராஜர் லட்சிய பேரவை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

