தூத்துக்குடி.
தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பழைய பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டு அதே வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பல வழித்தடங்களில் புதிய பேருந்து 7 பேருந்து விடியல் பயணத் திட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி, இனிப்புகள் வழங்கி ஓட்டுநர்களிடம் கூறுகையில்: பொதுமக்களின் நலன்கருதி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த விடியல் பயண பேருந்து அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை உள்ள இடைப்பட்ட நிறுத்தங்களில் நின்று சென்று மனித நேயத்தோடு பணியாற்ற வேண்டும். அதே நேரத்தில் உங்களை நம்பி பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் நலனும் முக்கியம் என்பதை உறுதிபடுத்தும் வகையில் கவனமாக பேருந்தை இயக்கிச்; செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதில் புதியதாக தொடங்கப்பட்ட பேருந்து வழித்தடங்களான தூத்துக்குடியிலிருந்து சுப்பிரமணியபுரம், கீழவைப்பார், பெருங்குளம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் 3 பேருந்தும், கோவில்பட்டியிலிருந்து வெள்ளப்நேரி, கீழஈரால், வேடப்பட்டி, அகிலாண்டபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் 4 பேருந்துகளும் என 7 பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் ஜேக்கப், விஜயகுமார், ரமேஷ் பாபு, தொமுச பொதுச் செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன், மத்திய தொழிற்சங்க துணை செயலாளர்கள் கருப்பசாமி, மகா விஷ்ணு, நகர கிளை செயலாளர் லிங்குசாமி, தலைவர் பி.வி.முருகன், பொருளாளர் மனோகரவேல், நிர்வாகிகள் சரவணன், மாரியப்பன், சுரேஷ், மாடசாமி, படையப்பா கணேஷ், ராஜகுமாரசாமி, ஜீவானந்தம், புறநகர்கிளை நிர்வாகிகள் மணி, சாமி, உலகநாதன், ஜெயகுமார், முருகேசன், திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாநகர இலக்கிய அணி அமைப்;பாளர் ஜீவன் ஜேக்கப், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ் செய்தி:
விடியல் பயணத் திட்டம் தூத்துக்குடி மண்டல புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் விடியல் பயணத் திட்டம் 08.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. தூத்துக்குடி மண்டலத்தில் 107 நகரப் பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சுமார் 1,10,000 மகளிர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 08.05.2021 முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 11 கோடியே 73 லட்சம் மகளிர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 31,033 திருநங்கைகள் மற்றும் 7,17,000 மாற்றுத்திறனாளிகள் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர். புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் கீதாஜீவனின் நேர்மையும் கடமையும்: புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வந்து சேர வேண்டும் என்ற கடமை உணர்வோடும் நேர்மையுடனும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லத்திலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ செல்லும் போது ஒரு காவல் உதவி ஆய்வாளர் மூன்று காவலர்கள் அமைச்சருடன் எல்லா நிகழ்வுக்கும் சென்று வருவது வழக்கமான நடைமுறை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் தனது பாதுகாப்பு வாகனங்கள் வர காலதாமதம் ஆனதால், கடமை உணர்வோடு பாதுகாப்பிற்கான காவலர்கள் இன்றி நிகழ்ச்சிக்கு வருகை தந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

