தூத்துக்குடி,டிச,2.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பட்டியிலின பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வடக்கு சோட்டையன்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது மட்டுமின்றி குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக தீர்த்து வைக்க வேண்டும் என்று அரசுக்கும் அரசுத்துறை அதிகாாிகள் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோாிக்கை வைத்தனா்.

3 தினங்களுக்கு மேலாக அப்பகுதிக்கு யாரும் வந்து பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் ஊடகத்தில் பேட்டி அளித்த நிலையில் செய்திகள் வெளியாகின அதன் பிறகு அப்பகுதிக்கு சென்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரான சண்முகையாவிடம் எங்கள் பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதோடு நோய் தொற்றுகள் பரவும் சூழல் உள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் சமையல் செய்ய முடிய வில்லை என்றும் விட்டுக்குள் உறங்க முடியாமல் தவிக்கிறோம் அதோடு மட்டுமல்லாமல் கழிப்பறை கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் உடனே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்குமிடையே வார்த்தைப் போர் மூண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ சண்முகையாவுடன் உடன் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி அந்த பகுதி பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து. மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி விட்டு தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி உள்ளிட்ட பலா் தலைமறைவாயினர் இதனையெடுத்து படுகாயங்களுடன் காளியம்மாள், மாரிஸ்வரி மற்றும் வசந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
தகவலறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஓவ்வொரு பகுதியிலும் உள்ள கோாிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரும் போராட்ட களத்தில் ஈடுபட்டுள்ளனா். என்பது குறிப்பிட தக்கது. தமிழக முதல்வர் பருவமழை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் உதவிடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் முனைப்புடன் செயல் பட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சோட்டையன் தோப்பு மக்கள் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய விஷயம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

