தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி சங்கர் காலனி, சின்னமணி நகா், லயன்ஸ்டவுன் உள்பட பல பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக மழை நீரை வெளியேற்ற அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் செய்தாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகா், கவுன்சிலா் பொன்னப்பன், ரெக்ஸ்லின், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.

