பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு : அதிரடியாக களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்த ஓட்டப்பிடாரம் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா…பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்!!
===============

ஓட்டப்பிடாரம், டிச, 1
டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக பொது மக்களுக்கு உதைவிடும் வகையில் திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். குறிப்பாக
காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்ததால் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ‘டித்வா’ புயல் காரணமாக கனமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தும் வகையில்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்தவா்களுக்கு திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா நிதியுதவி வழங்கினார். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் டித்வா புயலை யொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்டசெயலாளர் மற்றும் அந்த பகுதியை சார்ந்த திமுக நிா்வாகிகள் உதவி செய்திட வேண்டும். என்று கேட்டிக்கொண்டிருந்த நிலையில். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள இந்திராநகா் கீழத்தெரு பகுதியில் கன மழையால் வீடு இடிந்து சேதமான உாிமையாளருக்கு திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா கனமழையால் பாதிப்படைந்த மக்களை நோில்சென்று மழையால் இடிந்து சேதமான வீடுகளை பாா்வையிட்டு அதன் உாிமையாளா்களுக்கு வடக்கு ஓன்றிய திமுக சாா்பில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினாா். தமிழக முதல்வரின் உத்தரவுபடி எம்பி கனிமொழி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா திமுக நிர்வாகிகளோடு சென்று பொதுமக்களுக்கு ஆறுதலும் நிதி உதவி வழங்கியது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது.குவிகிறது.

