தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் உருவானதையொட்டி தென்தமிழகத்தின் கடற்கரை பகுதி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஒவ்வொரு பகுதிகளின் நிலை என்ன என்பதை கண்காணிக்கப்பட்டு 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளா்களுக்கு தேவையான கையுறை பாதுகாப்பு உடைகள் உபகரணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டஅரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ாியங்கா, ஆகியோா் வழங்கி பேசுகையில் மாநகராட்சி பொறுத்தவரையில் 60 வாா்டுகளிலும் தினசாி 120 டன் குப்பைகள் சேகாிக்கப்படுகின்றன. அதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிாித்து வெயில் மழை என இரு காலக்கட்டத்திலும் பொருட்படுத்தாமல் பணியாற்றுகிறீர்்கள் இதற்கெல்லாம் மேலே ஓரு படி சொல்ல வேண்டும் என்றால் கொரோனா காலக்கட்டத்தில நீங்கள் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குாியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அடுத்த மாதம் முதல் மாநகராட்சி பகுதியில் 30 இடங்களில் 3 ேவளை உணவுகள் வழங்கப்பட இருக்கிறது. பொது நலனில் இருந்து நாங்கள் பணியாற்றுவதை போல் மக்கள் நலனின் கவனம் செலுத்தி மனித நேயத்தோடு பணியாற்றும் அனைவரையும் பாராட்டுகிறோம். என்று பேசினாா்கள்.
நிகழ்ச்சியில் துணை மேயா் ஜெனிட்டா, உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, கவுன்சிலா்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், இசக்கிராஜா, அதிஷ்டமணி, சரவணக்குமார், ரெங்கசாமி, பொன்னப்பன், சரண்யா, ஜான்சிராணி, ரெக்ஸ்லின், விஜயகுமாா், சந்திரபோஸ், பட்சிராஜ், ராஜதுரை, முத்துவேல், மும்தாஜ், ராமுஅம்மாள், கனகராஜ், தனலெட்சுமி, முத்துமாரி, பேபி ஏஞ்சலின், ராமகிருஷ்ணன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

