கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் யூனியனுக்குட்பட்ட தெற்கு இலந்த குலம் பஞ்சாயத்து ஆத்திகுளம் ஊரைச் சார்ந்த வடிவேல் என்பவர் காட்டு பன்றிகளிடமிருந்து மக்காச்சோளம் பயிர்களை காப்பாற்ற தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி எதிா்பாராதவிதமாக சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். உயிரிழந்த வடிவேலுவின் மனைவி சுப்புத்தாய் மற்றும் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் ஆறுதல் கூறி சொந்த நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கயத்தார் மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி. மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வெயில்முத்து. கிளைச் செயலாளர் ராஜ்குமார் கிளை பொருளாளர் கருமாரி மற்றும் லட்சுமி கோமதி காளிராஜ் கமலேஷ் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

