செங்குன்றம் பகுதியில் 7.5 டன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் 2 நபர்களை கைது செய்து, 1 டாரஸ் லாரி, 5 இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றிய செங்குன்றம் காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான தொடர்ச்சியாக, மாதவரம் துணை கமிஷ்னர் கிருஷ்ணராஜ்,தலைமையிலான தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் சதிஷ்குமார், அசோக் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கிடைத்த தகவலின்பேரில் 21.3.2021 அன்று காலை மொண்டியம்மன் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்து வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த 1.கஜேந்திரன், வ/40, திருவள்ளூர் 2.கஜா, வ/33, பொன்னேரி ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 இலகுரக சரக்கு வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், இவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து மீஞ்சூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குட்கா புகையிலை பாக்கெட்டுகளுடன் நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் காவல் குழுவினர் அங்கு சென்று 1 டாரஸ் லாரி, 4 இலகு சரக்கு வாகனங்கள் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்டத்தை சாரந்த ராஜி, வ/37, என்பவரை கைது செய்தனர். குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த மற்றும் பதுக்கி வைத்திருந்த கும்பலைச் சேர்ந்த 3 குற்றவாளிகளை கைது செய்து, 7,565 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 டாரஸ் லாரி, 5 இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட செங்குன்றம் காவல் குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.




