கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .இந்நிலையில் பணம் பட்டுவாடா, தேர்தல் நிலவரங்களை கண்காணிக்க அனைத்து தொகுதிக்கும் FST பறக்கும் படையினர் மொத்தம் 54 குழுவினர் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வாகனச்சோதனை செய்து வருகின்றனர். மேலும் SST பறக்கும் படையினர் மொத்தம் 54 குழுவினர் நியமிக்கப்பட்டு அவர்களும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் 14 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நேற்று இரவு 23.03.2021அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரயணன் திடீரென மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார் .மேலும் முக்கியமாக மாநில எல்லையான களியக்காவிளை , காக்கவிளை , நீரோடி காலனி சோதனைச்சாவடிகளில் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அதுபோன்று மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளான அஞ்சுகிராமம் , ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளிலும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்து தான் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.



