தூத்துக்குடி அருகே பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளை, கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரிய பெருமாள் மகன் முத்துராமன் (38), இவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். அதில் ஒரு ஆட்டை, நட்டாத்தி பெட்ரோல் அருகே பைக்கில் வந்த 3பேர் திருட முயன்றுள்னர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 3 பேர்களையும் பிடித்து சாயர்புரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆடு திருட முயன்றவர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் சக்திவேல் (30), வீரநாயக்கன், தட்டு வடக்குத் தெருவைச் சேர்ந்த கனி மகன் செந்தில் குமார் (37), வசவப்பபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த கரிகாலன் மகன் மாரிமுத்து (40) எனத்தெரியவந்தது. இதுகுறித்து சாயர்புரம் சப் இன்ஸ்பெக்டர் அருள் காமராஜ் வழக்குப் பதிந்து 3பேரையும் கைது செய்தார்.

