காயல்பட்டணம் அருகே திருமண ஆசைகாட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் பாபு வளன் (25. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுததுள்ளார். தற்போது அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள பாபு வளனை போலீசார் தேடி வருகின்றனர். 


