• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரபரப்பு புகார்!!

policeseithitv by policeseithitv
October 13, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? – முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம்
ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது அடுக்கடுக்கான புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியைச் சார்ந்தவர் பரபரப்பான புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்போது ஊராட்சி செயலாளராக பணிபுரியும் ராமலிங்கம் ஓட்டப்பிடாரம் ஊராட்சியின் பொது நிதி TN-PASS வங்கி கணக்கில் இருந்து மோசடியான ஆவணங்கள் மற்றும் பல்வேறு போலி வவுச்சர்கள் மற்றும் பல்வேறு போலி பில்கள் மூலம் ஓட்டப்பிடாரம் ஊராட்சியிலே நடைபெறாத பணிகளுக்கு எல்லாம் நடைப்பெற்றதாக பொய் கூறி அரசு அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி சட்டத்திற்கு புறம்பாக ஊராட்சி செயலருக்கு வேண்டிய வங்கி கணக்கிற்கு மோசடியாக பண பரிமாற்றம் செய்ததை ஆய்வு செய்யக் கோரியும் மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் சட்டத்திற்கு புறம்பாகவும், முறைகேடாகவும், மோசடியாகவும், ஊராட்சி செயலர் ராமலிங்கம் அவர்கள் வழங்கிய கட்டிட வரைப்பட அனுமதி மற்றும் தடையில்லா சான்று மற்றும் தொழில்வரி ரசீது மற்றும் தீர்வை ரசீது ஆய்வு செய்தும், மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் MNGRS மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் கீழ் நடைபெறும் பணிகளில் ஊராட்சி செயலர் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள் மற்றும் நிதி முறைக்கோட்டை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், அதற்கு உண்டான ஆவணங்களை ஆய்வு செய்தும், மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சட்டவிதிகளுக்கு எதிராகவும், அரசு விதிமுறைகளுக்கு முரனாகவும், ஊராட்சி செயலர் ராமலிங்கம் தனக்கு வேண்டிய ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த இரண்டு பெண்களை தற்காலிக பணியாளர்களை தன்னிச்சையாக சட்டவிரோதமாக நியமித்து ஊராட்சி அலுவலகத்தில் அமர வைத்து கொண்டு அவர்களை வைத்து ஊர் பொதுமக்களிடமும் லஞ்சம் பணத்தை வசூல் செய்து கொண்டிருப்பதை தடுத்து தற்காலிக பணியார்களை உடனடியாக பணி நீக்கம் செய்து இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த பிரச்சைக்கு முழுதற்காரணமாக பல்வேறு மோசடிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ஊராட்சி செயலர் ராமலிங்கம் மீது சட்டப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி விண்ணப்பம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது இதில்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி பொது நிதி (TN-PASS)ல் உள்ள வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் பல்வேறு போலி வவுச்சர்கள் வைத்து வரவு செலவு செய்ததாக கூறி பல்வேறு நிதி முறைக்கேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். மேலும் ஊராட்சி பகுதியில் பைப் லைன் பணிகள், பொது சுகாதார பணிகள், மற்றும் மின் விளக்கு பராமரிப்பு பணிகள் நடைப்பெற்றதாகவும், இரவு பகலாக ஊராட்சி பணிகள் நடைப்பெற்றதாகவும் கூறி, பல்வேறு மோசடி பில்கள், போலியான வவுச்சர்கள் மற்றும் மோசடியான கிராபிக்ஸ் போட்டோக்களை வைத்து ஊராட்சி பகுதியில் நடைபெறாத பணிகளை எல்லாம் மற்றும் செய்யப்படாத பணிகள் எல்லாம் நடைப்பெற்றதாகவும், ஊராட்சியில் செய்யப்பட்டதாகவும் பொய்யான தகவல்களை கூறி பல்வேறு போலி ஆவணங்களை உருவாக்கி கடைகளில் பொருட்கள் மற்றும் சாமான்கள் வாங்கியதாக கூறி போலி பில்கள் மற்றும் போலி வவுச்சர்களை உருவாக்கி ஊராட்சி வங்கி கணக்கில் இருந்து ஊராட்சி செயலாளருக்கு வேண்டிய வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடியாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேசிபி  வாடகை, ஊராட்சியின் இதர செலவு என்று பல்வேறு செலவுகளை கணக்கில் காட்டி போலியான மோசடியான ஆவணங்களையும், வவுச்சர்களையும் சமர்ப்பித்து வங்கி கணக்கில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் (MNGRS) மகாத்மா காந்தி ஊரக தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு மோசடியை ஊராட்சி செயலர் ராமலிங்கம் தொடர்ந்து செய்து வருகின்றார். மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் 10 குக்கிராமங்களை கொண்டு தொகுப்பு வாரியாக 6 ஆக பிரிக்கப்பட்டது தற்போது நடந்து வரும் பணிகள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் மோசடி நபர்களை வைத்துக் கொண்டு MNGRS அந்த பணிகள் சம்மந்தமில்லாத நபர்களை வைத்து ஒரே ஆட்களை வைத்து மாறி மாறி புகைப்படம் எடுத்து ஒரே நபரை வேறு வேறு நபர்கள் என்று MNGRS அட்டையிலும் கையொப்பமிட்டு அதில் நடைபெறும் பணிகளையும் தொடர்ந்து அட்டை பதிவு செய்யப்பட்டு முறைகேடாக மோசடி நடைப்பெற்று வருகிறது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் அவர்கள் அரசு நிதியினை தனக்கு வேண்டிய நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தி அதிலும் லட்சகணக்கில் முறைக்கேட்டில் ஈடுப்பட்டு வருகின்றார். ஒரு தொகுப்பு ஒன்றுக்கு ஒரு நாளைக்கு MNGRS பணிகளுக்கு வேலைக்கு வராத30 நபர்களுக்கு மோசடியாக பணிக்கு வந்ததாக  பதிவு செய்யப்படுகிறது. 6 தொகுப்பிற்கு சுமார் 180 MNGRS அட்டைகள் தினமும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராத நபர்கள் வேலைக்கு வந்ததாக பொய்யான தகவல்களை கூறி மோசடியாக அட்டை பதிவு செய்யப்பட்டு அதற்கு உண்டான பணங்களும் முறைகேடாக அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு அதற்கு உண்டான கமிஷன் தொகை தினமும் 1லட்சம் ரூபாய் அளவிற்;கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் அவர்கள் கையூட்டு பெற்றுக் கொள்கிறார் என்ற விபரத்தையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் என்பவரால் கட்டிட வரைப்பட அனுமதி அனைத்தும் அரசு விதிமுறைகளை மீறி மோசடியாக நஞ்சை நிலத்திற்கும், அரசு அனுமதியில்லாத அப்புருவல் இல்லாத மனைகளுக்கும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடங்களுக்கும், சட்ட சிக்கல் உள்ள பல்வேறு பிரச்சனை உள்ள இடங்களுக்கும் மோசடியாக 50,000/- முதல் 2,00,000/- வரை லட்சமாக பணம் பெற்றுக் கொண்டு கட்டிட வரைப்பட அனுமதி வழங்கி வருகிறார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக அரசு புறம்போக்கு இடங்களுக்கு மேச்சல் புறம்போக்கு இடங்களுக்கு நீர் நிலை புறம்போக்கு இடங்களுக்கும், ஆவணங்கள் மற்றும் பட்டாக்கள் இல்லாத இடத்திற்கும் கட்டிட வரைப்பட அனுமதி மற்றும் வீட்டுத் தீர்வை ரசீதுகள் மற்றும் கடை தீர்வை ரசீது தற்போது ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் கையூட்டு பெற்றுக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ராமலிங்கம் அவர்களிடம் ரூ.50,000/- ஐம்பதாயிரம் லட்சப்பணத்தை கொடுத்தால் கட்டிட வரைப்பட அனுமதியில்லாமலே வீட்டு தீர்வை ரசீது, தொழில் ரசீது, கடை தீர்வை ரசீது போன்றவை எவ்வித ஆவணங்கள் இல்லாமல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது உள்ளது. மேலும் இதுப்போன்ற லஞ்ச பணத்தை வசூல் செய்வதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சட்டவிதிகளுக்கு எதிராகவும், அரசு விதிமுறைகளுக்கு முரனாகவும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் தனக்கு வேண்டிய ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த இரண்டு பெண்களை தற்காலிக பணியாளர்களை தன்னிச்சையாக சட்டவிரோதமாக நியமித்து ஊராட்சி அலுவலகத்தில் அமர வைத்து கொண்டு அவர்களை வைத்து ஊர் பொதுமக்களிடமும் லஞ்சம் பணத்தை தொடர்ந்து வசூல் செய்து கொண்டிருக்கிறார். இப்பிரச்சனை சம்மந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (Vigilance Anti Corrbation) அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேன்மை தாக்கிய ஐயா, அவர்கள் இப்பிரச்சனை சம்மந்தமாகவும், இம்மனு சம்மந்தாகவும் தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து 01.05.2025 முதல் 13.10.2025 வரை ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடி வேலைகள் முழுவதையும் ஆய்வு மற்றும் தணிக்கை செய்து TN-PASS) ஊராட்சி பொது நிதி கணக்கு, (MNGRS) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணிகள் நடைபெறும் மோசடி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய கட்டிட வரைப்பட அனுமதி தொழில் ரசீது, வீட்டு தீர்வை ரசீது ஆகியவைகள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அனைத்து வவுச்சர்கள் முழுவதையும் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி செயலர் ராமலிங்கம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்;, மேலும் தனக்கு சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் வரவேண்டிய லஞ்ச பணத்தை வசூல் செய்வதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி சட்டவிதிகளுக்கு எதிராகவும், அரசு விதிமுறைகளுக்கு முறனாகவும், ஊராட்சி செயலர் ராமலிங்கம்; தனக்கு வேண்டிய ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த இரண்டு பெண்களை தற்காலிக பணியாளர்களை தன்னிச்சையாக சட்டவிரோதமாக நியமித்து ஊராட்சி அலுவலகத்திற்குள் அமர வைத்து கொண்டு ஊர் பொதுமக்களை மிரட்டி லஞ்ச பணத்தை வசூல் செய்து கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தி, அந்த தற்காலிக பணியாளர்களை மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டியும், மேலும் நான் கொடுத்த இந்த புகார் மனு மீது ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 11/10/25 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற செயலாளர் ராமலிங்கம் மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவரை பணி நீக்கம் செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்ற கோரிகைகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஊராட்சி செயலாளர் ராமலிங்க மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது அந்த கிராம மக்கள் மத்தியில் கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

Previous Post

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கப்படாததை கண்டித்து தமிழக முதல்வர் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு

Next Post

1999 பேட்ச் பெண் எஸ். ஐ., க்கள் குமுறல் -டிஜிபி அலுவலகத்திற்கு மனு

Next Post
1999 பேட்ச் பெண் எஸ். ஐ., க்கள் குமுறல் -டிஜிபி அலுவலகத்திற்கு மனு

1999 பேட்ச் பெண் எஸ். ஐ., க்கள் குமுறல் -டிஜிபி அலுவலகத்திற்கு மனு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In