கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் பதவிக்கு ரேஞ்ச் அடிப்படையில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த பேட்ச் தான் 1981 ஆம் ஆண்டு பேட்சுக்குப் பின், சட்டம் ஒழுங்கு பிரிவில் பெண்களும் இணைந்து பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பேட்ச் ஆகும். போலீஸ் பயிற்சி பள்ளியில் எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி மூப்பு நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை பிடித்துள்ளனர்.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு 1999 பெண்கள் பேட்ச் எஸ். ஐ ., க்கள் மற்றும் தற்போது இன்ஸ்பெக்டராக உள்ளவர்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 1999 ஆம் ஆண்டு கடந்த பெண்கள் எஸ்ஐ தேர்வில், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், cut-off marks போன்றவை ஆண்களை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஆண்களுக்கு அதிகமாக இருந்தது. இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் வேறு விதமான தேர்வுகளிலும் வேறு அளவுகோள்களிலும் பங்கேற்றனர்.
எனவே, அந்த ஆண்டு TNUSRB நடத்தியது “Common Examination” அல்ல. அந்த அடிப்படையில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் Police Training College (PTC)-இல் ஒரேபோல் பயிற்சி பெற்று, அங்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் (Final Examination) மதிப்பெண் பெற்றோம். அதன்பின் தற்போது காவல் ஆய்வாளர்களாக பணியாற்றி வருகிறோம்.
உச்சநீதிமன்றத்தின் Ranjit Singh Vs State of Tamil Nadu என்ற வழக்கில், “Qualifying Examination” என்ற சொல்லைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பை தற்போது தவறாகப் புரிந்து கொண்டு, பெண் மற்றும் ஆண் Sub-Inspectors அனைவருக்கும் TNUSRB (Selection) marks அடிப்படையில் seniority fix செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 1999 ஆண்டு நடைபெற்ற TNUSRB தேர்வு ஒரே மாதிரியான (Common) தேர்வு அல்ல – அது ஆண்களுக்கு தனித்த cut-off, பெண்களுக்கு தனித்த cut-off, வேறு physical standards மற்றும் வேறு assessment criteria கொண்டது.
எனவே, அதனை “Common Examination” என்று கூறி அதன் அடிப்படையில் seniority நிர்ணயிப்பது முற்றிலும் தவறானதாகும்.
1999 ஆம் ஆண்டு Sub-Inspectors (Men & Women) அனைவரின் seniority-w Rule 25 19 PTC Final Examination marks அடிப்படையில் நிர்ணயிக்குமாறு கூறியுள்ளனர்.
செய்தியாளர் : சு. இரத்தினவேல்.
மதுரை.

