தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கப்படாததை கண்டித்து தமிழக முதல்வர் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு


தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சலுகை விலை வீட்டுமனை அரசு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு இது குறித்து அக்டோபர் 23ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு நடத்த அனுமதி கடிதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கொடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.மேலும் வரும் தீபாவளிக்கு கடந்த ஆண்டு போல ஸ்பான்சர் மூலம் உறுப்பினர்களுக்கு *தீபாவளி தொகுப்புகள்* சிறப்பாக வழங்க கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து அவர்கள் பணி தன்மை ஆராய்ந்து வரும் பொதுக்குழு ஒப்புதலுடன் சங்கத்தில் சேர்ப்பதற்கு இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இன்றைய கூட்டத்தில் பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து மற்றும் செயற்கு உறுப்பினர்கள் குமார், கண்ணன், முத்துராமன், ராஜன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

