நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா கன்னேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா திங்கள் மற்றும் செவ்வாய் இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஊரின் அருகில் உள்ள நீரோடையில் பால் ஊற்றி தண்ணீருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.அதன் அருகில் உள்ள சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அன்றைய மாலை கிராமத்திலுள்ள ஸ்ரீராமன் ஆலயத்தில் அப்போ பூஜைகளும் பஜனைகளும் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பஜனைகளும் ஆடல் பாடல்களும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கன்னேரி கிராமத்தில் உள்ள அனைவரும் பங்கேற்று அம்மனின் திருவருளைப் பெற்றனர்.


