உதகை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் அவர்களை ஆதரித்து, நீலகிரி மாவட்ட கழக துணை செயலாளர் ஜே.ரவிகுமார் அவர்கள் உதகை ஏ.டி.சி., திடல் முன்பு “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ராஜா, மாவட்ட அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், LPF ஜெயராமன், மேத்யூஸ், மார்கெட் ரவி, மத்தீன், அமலநாதன், தியாகு, பர்னபாஸ், எபிநேசர், ராஜ்குமார், ஆட்டோ பாபு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரவி, மனேஷ், ஜாகீர் உட்பட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

