நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனா ஒரு பக்கம் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள், மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை உடனுக்குடன் நிறைவேற்றும் ஊராட்சி மன்றம் என்ற நற்பெயரை திருவாடானை ஊராட்சிமன்ற பெற்றுள்ளது இதன் தலைவர் இலக்கிய ராமு அவர்கள் சுகாதாரம் குடிநீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார்.
தற்போது கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாடனை ஊராட்சி பகுதியில்
கொரோனா தடுப்பு வழிமுறைகளைபொதுமக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் திருவாடனை ஊராட்சி சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி அமைத்து கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சென்று விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஊராட்சி மன்ற தலைவர் இலக்கிய ராமு அவர்கள் அவர்கள் விழிப்புணர்வு வாகனத்தை நாள்தோறும் கிராம பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் செல்லுமாறு உத்தரவிட்டார் இந்த விழிப்புணர்வு அறிவிப்பு அந்த கிராம மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள் அரசின் உத்தரவை உடனடியாக மதித்து ஒலிபெருக்கி அமைத்து தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயலை பாராட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பஞ்சாயத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் சிறந்த கிராம ஊராட்சியாக விளங்குகிறது.
செய்தி தொகுப்பு: மங்கலகுடி அபுபக்கர் சித்திக்

