தூத்துக்குடி, அக்,4
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை நடத்த வேண்டும் என அறிவித்து முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கலெக்டர் இளம்பகவத், சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்த பின் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி முகாம் முழுவதும் பார்வையிட்டு மருத்துவர்கள் செவிலியர்களை நல்லமுறையில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

புதியம்புத்தூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுகாதார பரிசோதனை செய்து கொண்டனர். இன்று நடைபெற இருந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 18 கிராமங்களிலும் உள்ள மக்கள் அறிந்திடும் வகையில் வால்போஸ்டர், மற்றும் விளம்பரப் பதாகைகள், ஆகியவை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அ. இளையராஜா, இவர்களுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் மனதார பாராட்டுக்கள் தெரிவித்தனர். அதுபோல் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனைக்காக வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களை முகாமிற்கு வருவதற்கு வாகன ஏற்பாடுகள் ஆகியவற்றை ஒன்றியச் செயலாளர் இளையராஜா முன்னின்று சிறப்பாக செய்திருந்தார். இதனால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்தது.
இந்த விழாவில் தாசில்தார் சண்முகவேல், பயிற்சி கலெக்டர் புவனேஷ் ராம், திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெயக்கொடி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் சண்முக நாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட் வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை இயக்குநர் காசநோய் பிரிவு சுந்தரலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கோகுல், புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் கலைவாணி, மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நேரடி உதவியாளர் மதுரம் பிரைட்டன், தேசிய நல்வாழ்வு குழுமம் ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, மாற்றுதிரனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், நில கல்வியாளர் முத்துசாமி மற்றும் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், தங்கதுரை பாண்டியன், கப்பிகுளம் பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் இருவேளையும் உணவு வழங்கப்பட்டது.
18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து சுகாதார பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 30-க்கும் மேற்பட மருத்துவ பிரிவு சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, காச நோய், தோல் வியாதி, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் ஏராளமான நபர்கள் பங்கேற்று மனமகிழ்ச்சியுடன் திரும்பினர் அப்போது அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆகியோருக்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

