தூத்துக்குடி,அக்,5
தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினரும், நியூஸ் எக்ஸ்பிரஸ் மாவட்ட செய்தியாளருமான எஸ்.செந்தில் முருகன், எஸ், சுபா தம்பதியரின் புதல்வி செல்வி எஸ். தில்ஷா வுக்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி தூத்துக்குடி மாதா நகர் நிலா மஹாலில் வைத்து அக் 5 இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் சிதம்பரம், பொருளாளர் ராஜு, சங்க கௌரவ ஆலோசகர்கள் எம். ஆத்திமுத்து, ஜெகதீஷ் , செயற்குழு உறுப்பினர்கள், எம். கண்ணன், சரவணபெருமாள், மாரி ராஜா இருதயராஜ், உறுப்பினர்கள் அண்ணாதுரை,சேகர், செய்யது அலி சித்திக், மற்றும் ராஜா சிதம்பரம், மோகன், முருகன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து ஆசிர்வாதங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

