சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் பாஜக முன்னாள் எம்பி இல. கணேசன் வாகனத்தில் இருந்தவாறு பிரச்சாரம் மேற்கொண்டார்,
அப்போது பேசுகையில் வேட்பாளர் H.ராஜா நல்ல மனிதர்,விவசாயம் செய்யக்கூடிய ஒரு விவசாயி எனவும் அவருக்கு வாக்களியுங்கள், காரைக்குடி தொகுதி வளர்ச்சி அடைய மிகவும் பாடுபடுவார் எனவும், இப்பகுதியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவார் என பொதுமக்களிடையே உரையாற்றினார், இந்த பிரச்சாரத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள், ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


