தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் பல்வேறு சாலை பணி கால்வாய் அமைக்கும் பணி உள்பட பல கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைகாலத்திற்கு முன்பு அனைத்தையும் நிைறவு செய்யும் வகையில் பணிகள் நடைபெறும் இடங்களில் சூழற்சி முறையில் நடைபெற்று வரும் பணிகளான காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், கவுன்சிலா ராஜேந்திரன், வட்டச் செயலாளர் நவநீதன், வட்ட பிரதிநிதிகள்ரஜினி முருகன் பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்தனா்.

