தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கிடைக்கும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ப்ரியங்கா தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அட்டையாள அட்டை ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: கடந்த ஓராண்டுகளுக்கு முன் அட்டையாள அட்டை வழங்கும் பணியை கனிமொழி எம்.பி துவங்கி வைத்தார். அப்போது 3160 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் பல்வேறு நன்மைகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. தாட்கோவில் பதிவு செய்து அதிலும் தொழில் கடனாக ரூ.50 ஆயிரம் வரை பெற்றுக் கொள்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நமது மாநகராட்சியில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நானும் ஆணையரும் கலந்து பேசி இந்த முகாம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. இஎஸ்ஐ மருத்துவமனை கடந்த 7, 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்ததை கனிமொழி எம்.பி. முயற்சியினால் 100 கோடி மதிப்பில் தனியார் மருத்துவமனை தரத்திற்கு இணையாக கட்டப்பட்டு வருகிறது. சிகிச்சையும் அதேபோல் இருக்கும். தற்போது இஎஸ்ஐ மருத்துவமனை கடற்கரை சாலையில் இருந்து வருகிறது. அங்கு சத்துமாத்திரை வாங்கி உட்கொள்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் வரும். எல்லோரும் சமம் என்பதை கருத்தில் கொண்டு உங்களுக்கான உடை, கையுறை ஆகியவற்றை எல்லாம் முறையாக நம்முடைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். பதிவு செய்யாமல் இருந்தால் பணியாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தூத்துக்குடி மாநகராட்சி முன்மாதிரியான மாநகராட்சியாக செயல்படுகிறது என்று பேசினார். பின்னா் மருத்துமுகாமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் துைண மேயர் ஜெனிட்டா, தாட்கோ மேலாளர் ஜனினிஸ் டெர்சிபா, தூத்துக்குடி இஎஸ்ஐ கிளை மேலாளர் சுமித்ரா, சமுக பாதுகாப்பு அலுவலர் அஸ்வின், டாக்டர் முத்தழகு, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், ராஜபாண்டி, சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், சுகாதார பணியாளர்கள், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

