தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளியை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் வழ மொட்டைகோபுரம் கடற்கரை சாலையில் கரைவோலை விவேகானந்தர் நகர் அருகில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சிலுவை ராஜா (42) என்பவர் இன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணைண மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

