விளாத்திகுளம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆளுயர மாலை அணிவித்து, வீர வாள் வழங்கி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விளாத்திகுளம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சின்னப்பன் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 15 ம் தேதி வேட்பு மனு தாக்கலின் போது பல்லாயிரகணக்கான பொதுமக்கள் படைசூழ பவணி வந்து, விளாத்திகுளம் தொகுதியையே அமர்களப்படுத்தி வேட்பு மனு தாக்கல் செய்து, எதிர் கட்சியினரை உறைய வைத்தார்.
அதனையடுத்து, அதிமுக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், தொகுதியில் தான் செய்த செயல்கள் உள்ளிட்ட அனைத்தையும் பட்டியலிட்டு கூறி, தொகுதியில் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். மேலும் கிராமங்கள் தோறும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும், வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதை கான அறிய முடிகிறது.
இந்நிலையில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வேலிடுபட்டி கிராமத்தில் திறந்த வெளி ஜீப்பில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு வேலிடுபட்டி கிராம பொதுமக்கள் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ஆளுயர மாலை அணிவித்து, வீர வாள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


