தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது. உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் : முன்னாள் அமைச்சர்சி.த. செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!

தூத்துக்குடி,செப்,8
தூத்துக்குடியில் இயங்கி வரும்
அனல்மின் நிலையத்தில்
மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று வருகிறது.
நிர்வாக சீர்கேடு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், ஆளும்கட்சி திமுக மிரட்டலை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும்
தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளை
உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர்
செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்தார்
இதுகுறித்து தூத்துக்குடியில் டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நான்காண்டு திமுக அராஜக ஆட்சியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. அதிகாரிகள் மத்தியில் ஊழல் தலை விரித்தாடுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் குறைந்த விலையில் டெண்டர் கோரியது தொடர்பாக உயரதிகாரிகள் துணையுடன் திமுக நிர்வாகிகள் அந்த ஒப்பந்ததாரரின் வீட்டுக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்து ஒப்பந்ததாரர் காவல் துறையில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திராவிட மாடல் திமுக ஆட்சியில் காவலர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தூத்துக்குடி அனல் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழுதடைந்த இரண்டு அலகுகளையும் மறு கட்டமைப்பு செய்ய சுமார் 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா க கூறப்படும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகள், பினாமிகளின் அராஜகம் அனல் மின் நிலையத்தையும் அதன் நிர்வாகத்தையும் முடக்கி அரசுக்கு பல கோடி இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் சிபிஐ உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகளில் நிர்வாக சீர்கேடும் ஊழலும் அராஜகமும் தலை விரித்து ஆடுகிறது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகிறார்கள். ஆளும் திமுகவின் அராஜகத்தை கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று விரைவில் மிகப்பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் கவுன்சிலா் அகஸ்டின், முன்னாள் மேலூா் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் அசன், சங்கா், பேச்சியப்பன், ராஜேந்திரன், கணி, ஐயப்பன், ஆகியோா் உடனிருந்தனர்.

