தூத்துக்குடி.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ஜெபமணி ஜெயக்குமார் என்பவர் அதே ஊரைச் சார்ந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பூலோகபாண்டியன் மீது மாவட்ட எஸ்.பி அல்பர்ட் ஜானிடம் மோசடி புகார் மனு அளித்தார்.
ஜெபமணி ஜெயக்குமார் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது : நான் குலையன்கரிசல் மேல்நிலைப்பள்ளியில் கிளார்க் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன். கடந்த 2024 வரும் அக்டோபர் மாதம் புதுக்கோட்டை ஊரை சேர்ந்த பூலோகபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடையை வாடகைக்கு கேட்டிருந்தேன். அதற்கு அவரும் சம்மதித்து 07.10.2024 அன்று காசோலை வாயிலாக ரூ.2 லட்சம் அட்வான்சாக பூலோக பாண்டியனிடம் கொடுத்தேன். மேற்படி கடையை மராமத்து வேலைகள் செய்து தருவதாக சொன்ன பூலோக பாண்டியன் அந்த வேலையை செய்து கொடுக்காமல் என்னை வாடகைகக்கு கடையை நடத்துங்கள், ஒருசில நாட்களில் மராமத்து வேலை செய்து கொடுப்பதாக கூறினார். ஆனால் நான் அட்வான்ஸ் கொடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும், பூலோக பாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் ரூ.2 லட்சத்தை திரும்ப கேட்ட போது, அந்த கடைக்கு வேறு நபர்கள் வாடகைக்கு வந்த பின்னர் அவர்களிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி எனக்கு கொடுப்பதாக கூறினார். நானும் ஒப்புக் கொண்டேன். அதன் பின்னர் ஒருசில நாட்களிலேயே மேற்படி பூலோகபாண்டியன் கடைக்கு வேறொரு நபர் டீ கடை வைத்து கொண்டார். அந்த விபரம் தெரிந்த நான் பூலோகபாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணத்தை கேட்ட போது, இப்போ தருகிறேன், அப்போ தருகிறேன் என்று ஏதேதோ காரணங்கள் கூறி 10 மாதங்களை கடத்தி என்னை ஏமாற்றி வந்தார். இதனால் நான் எனது ஊர் பெரியவர்கள் மூலமாக கடந்த 2025 ஜீலை மாதம் இறுதி வாரத்தில் பூலோக பாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் குறித்து பேசிய போது, மேற்படி பூலோக பாண்டியனிடம் அவரது வங்கி கணக்கு உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், புதுக்கோட்டை வங்கி கிளையின் காசோலை எண்கள் 251168, 251169 ஆகிய இரண்டு காசோலைகளில் ஒன்றில் 01.08.2025 தேதியிட்டு ரூபாய் 1 லடச்த்திற்கும், 06.08.2025 தேதியிட்ட ரூ.1 லட்சத்திற்கும் இரண்டு காசோலைகளை கொடுத்தார். நான் மேற்படி காசோலைகளை எனது வங்கி கணக்கு உடைய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி குலையன்கரிசல் கிளையில் வசூலுக்கு தாக்கல் செய்தேன். ஆனால் மேற்படி பூலோகபாண்டியன் கொடுத்த இரண்டு காசோலைகளும் அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இன்றி வங்கியால் 29.08.2025 அன்று திருப்பப்பட்டது. உடனே இதுகுறித்து நான் பூலோகபாண்டியனை தொடர்பு கொண்டு கேட்ட போது, 1 வாரம் கழித்து 09.09.2025 அன்று கொடுத்து விடுவதாக உறுதி அளித்தார். நானும் பூலோக பாண்டியனின் வார்த்தையை நம்பி அதனை ஏற்று கொண்டேன். பின்னர் நேற்று 09.09.2025 மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை பஜாரில் உள்ள அவரது அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த பூலோகபாண்டியனிடம் எனது அட்வான்ஸ் பணம் ரூ.2 லட்சத்தை கேட்க சென்ற போது, பூலோகபாண்டியன் என்னை பார்த்து, என்னல ஒயாம காசு காசுன்று தொந்தரவு பண்ணிகிட்டு இருக்க, நான் அ.ம.மு.க. கட்சி வடக்கு மாவட்ட செயலாளர், என்கிட்டேயே நீ பணத்தை திரும்ப கேட்பியா, என்று தேவையற்ற பதில்களை கூறி, இனி நீ என்கிட்ட காசு கேட்டு வந்த நான் சார்ந்த கட்சியில இருக்கிற கூலிபடையை வச்சி ஒன்ன வெட்டி கொன்று விடுவேன், என கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, என்னை அடிப்பதற்கு முயற்சித்தார். நான் பயந்து போய் ஓடி வந்து விட்டேன். எனது குடும்பத்தாரிடம் நடந்த விபரத்தை கூறி தங்களிடம் இந்த புகார் மனுவினை கொடுக்கிறேன். எனவே என்னிடம் ரூ.2 லட்சம் அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு அந்த பணத்தை திரும்ப என்னிடம் கொடுக்காமல் ஏமாற்றி, காசோலைகளை கொடுத்து நம்ப வைத்து மோசடி செய்து என்னை கெட்ட வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுத்த மேற்படி பூலோகபாண்டியன் மீது தகுந்த சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

