தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநெல்வேலி ஊரக உட்கோட்டம், மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதற்றமான வாக்கு சாவடி

களான ராமையன்பட்டி, சேதுராயன்புதூர், அழகியபாண்டியபுரம், வாகைகுளம், உக்கிரன்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 28 வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, மானூர் காவல் ஆய்வாளர் ராமர்,உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

