அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு மற்றும் 6 முக்கிய காவல் நிலையங்களுக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் 8 ஸ்கூட்டிகளை வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் காவல் நிலையங்கள் சார்பாக இருசக்கர வாகனங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்திய அரசின் நிர்பயா நிதியின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் குறைகளை நேரில் சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண்கள்:181, 1098 ,112 மற்றும் 100 வரும் அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடம் விரைந்து நடவடிக்கை எடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாட்டிற்கு 800 இருசக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டன. முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்திற்கு 8 ஸ்கூட்டிகள் வழங்கப்பட்டது. அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு வழங்கி, பச்சை கொடி அசைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, சேகர், திரு.ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் கார்த்திகேயன் மற்றும் அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.



