செங்கல்பட்டுக்கு வருகிற 22ம் தேதி வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினாா்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 22.08.25 அன்று செங்கல்பட்டிற்க்கு வருகை தருவதை முன்னிட்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு, மேற்கு, வடக்கு ஒன்றியம், கூடுவாஞ்சேரி, மறைமலை, செங்கல்பட்டு ஆகிய நகர கழகம் சாா்பிலும் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசுகையில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும் தொகுதி வாாியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடியாரை செங்கல்பட்டில் அனைவரும் ஓன்றினைந்து சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் அதற்கு இப்போதே அனைவரும் தயாராகுங்கள் என்று பேசினாா்.
கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் சின்னையா, துணைச் செயலாளர் நாவலூர் முத்து, செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி இணைச்செயலாளர் கனிதாசம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், கஜா (எ) கஜேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் சீனிவாசன், மறைமலை நகர் நகர செயலாளர் ரவீகுமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

