தூத்துக்குடியில் ஐயா ரோச் பூங்காவில் நடைபெற்று வரும்
ஸ்நோஸ் மாபெரும் பொருட்காட்சி-2025 வருகிற 17 ஆம் தேதி நிறைவு பெறுகிறது : சிறப்பு சலுகையாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நுழைவு கட்டணம், ஒரு ராட்டினத்தில் சுற்றி மகிழ இலவசம் ஸ்நோஸ் பொருட்காட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு


==================
தூத்துக்குடி,
ஆகஸ்ட், 14
உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்துவது நடைமுறையாகும் அதன்படி
தூத்துக்குடியில் ஐயா ரோச் பூங்காவில் நடைபெற்று வரும்
ஸ்நோஸ் மாபெரும் பொருட்காட்சி-2025 அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் வகையில் பல சிறப்பம்சங்களை கொண்ட ராட்டினங்கள், உணவு ஸ்டால்கள், குழந்தைகள், மாணவர்கள் பெண்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் விளையாடி மகிழும் வகையிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய அரங்குகள் நிறைந்துள்ளன. இதனை தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கிராம மக்கள் பணிமயமாதா ஆலயத்திற்கு இறை வழிபாட்டிற்கு வரும் பொழுது ஆலயத்திற்கு மிக அருகில் உள்ள தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்திருக்கும் ஐயா ரோச் பூங்காவில் ஸ்நோஸ் பொருட்காட்சி குழு சார்பில் மாபெரும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது இந்த பொருட்காட்சி வருகிற 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே பொருட்காட்சி நடைபெற உள்ளதால்
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த சிறப்புமிக்க விளையாட்டுகளை விளையாடுவதற்கும் ராட்டினங்கள், ஸ்டால்கள் போன்ற அரங்குகளை கண்டு களிப்பதற்கும் ஏதுவாக அவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்றும்
ஜெயின்ட் வில்.
கொலம்பஸ் போன்ற ராட்டினங்களில் ஏதாவது ஒன்று கட்டணம் இன்றி இலவசமாக சுற்றி மகிழலாம் என ஸ்நோஸ் பொருட்காட்சி நடத்திவரும் ஆர்தர் மச்சாது இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை மாணவ மாணவியர்களுக்காக தெரிவித்தார்.
ஸ்நோஸ் பொருட்காட்சியில்
இரவை பகல் போல் காட்சியளிக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த பொருட்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உணவு வகை ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் ஜெயின்ட் வில். ரோலர். கோஸ்டர். கப் வீல். கொலம்பஸ். மகாராஜா ட்ரெயின். டோரா. டைட்டானிக். டபுள். டக்கர் கிராஸ்வில். சிலம்பம். கோஸ்டர் உட்பட 25க்கும் மேற்பட்ட ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சிறுவர்களுக்கான பைக். கார். போர்ட். பலூன் ஹெலிகாப்டர். மற்றும் பல வகையான சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மரணக்கிணறு என்று அழைக்கப்படும் பைக் ரேஸ் போன்ற விளையாட்டுகளும் உள்ளது. மேலும் இந்தப் பொருட்காட்சிக்கு வரும் வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. இதற்கான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது அதுபோல குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் பொது மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. ஆகையால் வருகிற 17ஆம் தேதி வரை அதாவது இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே பொருட்காட்சிகள் நடைபெற உள்ளதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்பெறுவதற்காகவே இந்த சிறப்பான அதிரடிகளை
ஸ்நோஸ் பொருட்காட்சி நிர்வாகம் செய்துள்ளது பொதுமக்கள் தங்களுடைய பொழுதுபோக்கு நிகழ்வுக்காக ஐயா ரோச் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் பல்வேறு வகையான ராட்டினங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள பொருட்காட்சியில் மக்கள் பொழுது போகலாம் என்பது கருத்தாக உள்ளது. ஆகையால் குடும்பத்துடன் கண்டு மகிழ வருகை தருமாறு பொருட்காட்சி நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

