தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்: புரோக்கர்கள் பலர் தப்பி ஓட்டம்!?


தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
புரோக்கர்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு வகைகளுக்காக வரும் பொதுமக்களிடம் அடாவடி வசூல் நடப்பதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1லட்சத்து 52 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கிருந்த இடைத்தரகர்கள் பலரும் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரவர்கள் அட்டூழியத்தை முடிவு கட்டும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.

