ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில்
இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை!!
தூத்துக்குடி,
ஆகஸ்ட், 11


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் 85வது அவதார பெருமங்கல விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் வளம்பெறவும், தீப்பெட்டி தொழில்வளம் சிறக்கவும், கல்வி அறிவு மேலாங்கவும், வேலைவாய்ப்பு பெருக வேண்டியும் மாபெரும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தீபம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான மகளிர் 108, 1008 மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த கஞ்சிக்கலய ஆன்மிக ஊர்வலத்தை மன்ற தலைவர் ஆர்த்தி தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு சமுதாயப்பணியாக வேஷ்டி, சேலைகளை கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார். விழாவில், திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம், தளவாய்புரம் ராஜ், பேச்சியம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

