தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்று, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

