தூத்துக்குடி ஜூலை 29-
தூத்துக்குடி லயன்ஸ் கிளப் தலைவராக ஓட்டப்பிடாரம் திமுக., கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.
தூத்துக்குடி டி.எஸ்.எப் கிராண்ட் பிளாசா-வில் தூத்துக்குடி லயன்ஸ் கிளப் தலைவராக ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் துணை சேர்மனுமான காசி விஸ்வநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் செயலாளராக லயன் டேவிட்டும், பொருளாளராக லயன் விக்னேஷும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், அய்யாதுரை, ஜான் கென்னடி ராஜன், வெற்றி செல்வன், உபால்ட்ராஜ்மக்கென்னா, அன்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லயன்ஸ் கிளப் தலைவர், செயலாளர், பொருளாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

