புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாமக இடம்பெற்று இருந்தது. ஆனால் பாஜக கூட்டணியில் பாஜக, அதிமுக, மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் 30 தொகுதிகளை பிரித்து கொண்டது.
இதனால் பாமக பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது. இதன் அடிப்படையில் பாமக போட்டியிடுகின்ற 10 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால்10 தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை பாமக வேட்பாளர்கள் இன்று திடிரென திரும்ப பெற்றனர். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் பாமக இரு கட்சி தலைவர்களும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

