விளாத்திகுளத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாளான இன்று வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விளாத்திகுளம் தொகுதியை பொறுத்தவரையில் 16 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 1 வேட்பாளர் இன்று வாபஸ் பெற்றார். வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அனைத்து வேட்பாளர்களும் தீவிர சோதனை செய்யப்பட்டும், முகக் கவசம் மற்றும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் .
பின்னர் மீதமுள்ள 15 வேட்பாளர்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட ELECTION OBSERVER திரு.அஸ்வானிகுமார் சவுதாரி I.A.S அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.அபுல்காசிம் அவர்கள் சின்னங்களை ஒதுக்கினார்கள் . அதன்பின் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பிரச்சாரம் செய்ய அறிவுரைகள் வழங்கினார்கள்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ரகுபதி, விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் வேட்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


