எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான படம் இதயக்கனி.இந்த படம் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிய உந்துசக்தியாக திகழ்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும் மக்கள் மனதில் எளிதாக சென்றடைந்தது. இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இன்பமே உந்தன் பேர், நீங்க நல்லா இருக்கணும் போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.காலங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத காவியமாக மக்கள் மனதில் இருந்து வரும் இதயக்கனி படம் வெளியாகி 50 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதயக் கனி படம் மீண்டும் ஜூலை 4-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகின.உலக எம்.ஜி.ஆர். பேரவை படத்தை வெளியிட்டுள்ளது 4.கே.டிஜிட்டல் முறையில் நவீன மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியாகும் இதயக்கனி படத்திற்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் வெளியான இதயக்கனி திரைப்படத்தை எவர் ஸ்கிரீன் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதயக்கனி திரைப்படத்தை கண்டு ரசிக்க திரையரங்கம் வந்த அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி த செல்லப்பாண்டியனுக்கு அதிமுக நிர்வாகிகள், எவர் ஸ்கிரீன் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் ரசிகர்கள் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த காரர், வின்சென்ட்,,கேசியர் ஜெயமணி,முத்துப்பாண்டி சிவசுப்பிரமணியன் உட்பட எம்ஜிஆர் ரசிகர்கள் வெடி வெடித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.அதன் பிறகு திரையரங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இதயக்கனி திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் கேக் வழங்கி திரைப்படம் பார்க்க வந்த அனைவரையும் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உற்சாகமாக வரவேற்றார். பின்னர் அதிமுக நிர்வாகிகள், எம்ஜிஆர் ரசிகர்கள், பொதுமக்களோடு அமர்ந்து திரையரங்கில் எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தை முழுவதுமாக கண்டு ரசித்தார்.இந்த கொண்டாட்டத்தில்.தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்,முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் முன்னாள் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம்,முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சி.த.செ.ராஜாசிங்,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்என்.சிவசுப்பிரமணியன், நெப்போலியன்bவட்ட செயலாளர்கள்vலயன்ஸ் டவுன் சகாயராஜ்,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,டெரன்ஸ்,பெலிக்ஸ்,சங்கர், சகாயராஜ்ரா ஜேந்திரன்,பேச்சியப்பன்,முருகன்
மகளிர் அணியினர்
பெருமாள் தாய்,சாய் சுதா,முத்துலெட்சுமி,ரெக்ஸி,அமைப்பு சாரா ஓட்டுநர் அணி.,நடராஜன்,அரசு,மற்றும்திரளான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாக்ஸ் நியூஸ்
==============
தூத்துக்குடிபாலகிருஷ்ணா திரையரங்கில் மாலை 6:40 க்கு எம்ஜிஆர் நடித்த இதயக்கனி திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காணப்பட்டது. எம்ஜிஆர் பாடல்களுக்கு ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர். ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களோடு தொண்டனாக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி. த. செல்ல பாண்டியன் அமர்ந்து எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தை மு
ழுவதுமாக கண்டு ரசித்தார். படம் பார்க்க வந்த ஒவ்வொருவருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் கேக் வழங்கி வரவேற்ற நிகழ்வு தூத்துக்குடியில் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.
