பெருந்தமிழர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் 166 வது பிறந்தநாள் விழாவானது இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் போல்டன் புரம் 2 வது தெரு இரட்டைமலை சீனிவாசன் தூண் அமைந்துள்ள இடத்தில் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை, ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் நடைபெற்றது.

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை வழக்கறிஞரணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரசாத் வரவேற்புரை ஆற்றினார். பறையர் இன புரட்சி போராளி புலி.செ. இளவரச பாண்டியன் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனாரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் வாரியர், நாம் தமிழர் கட்சி இசக்கிதுரை, பகுஜன் சமாஜ் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரத்தினசாமி, தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் அஜீதா அக்னல், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அர்ஜுன், அ.தி.மு.க முன்னால் மாமன்ற உறுப்பினர் ஜெ. தனராஜ், விழித்தெழு இளைஞர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் நீலம் ஜே. பிரதீப், அதிமுக 50 வார்டு அதிமுக வட்டச் செயலாளர் பூரணசந்திரன், மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், பேரவை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


