தூத்துக்குடி ஜூன் 1
“நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த, தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று புகழப்பட்ட மக்கள் சேவகர் . அஞ்சலை அம்மாள் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக நிர்வாகிகள்
மலர் தூவி மரியாதை செய்தனர்.

அஞ்சலை அம்மாளின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
“இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள். கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது ஆணைக்கிணங்க
பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும்
தவெக நிர்வாகிகள்
அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

