தூத்துக்குடி
அத்திமரப்பட்டி இளைஞர்கள் சார்பில் வைகாசி விசாகம் முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர் பானங்கள் உணவுகள் வழங்க சிறப்பான ஏற்பாடு :
பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் தொழிலதிபர்
எஸ். பி. மாரியப்பன் துவக்கி வைக்கிறார்.
=========-====-=—
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். முருகனின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கக் கூடிய பலன், வைகாசி விசாகத் திருநாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதிகம். அத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது.
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் ஆண்டுதோறும் குவிந்து காணப்படுவார்கள் அதிலும், குறிப்பாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் இருப்பார்கள்..

இந்நிலையில் பக்தர்களுக்கு
தூத்துக்குடி அத்திமரப்பட்டி இளைஞர்கள் ஏற்பாட்டில் காலையில் இருந்து குளிர்பானங்கள் நீர்மோர், வழங்கவும் அதனைத் தொடர்ந்து மாலையில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு உணவுகள் வழங்கவும் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர். அத்திமரப்பட்டி இளைஞர் அணி சார்பில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் சமூக நீதிப் போராளி தொழிலதிபர்
எஸ். பி. மாரியப்பன் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக அத்திமரப்பட்டி இளைஞர்கள் இன்று
பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ். பி. மாரியப்பன் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வைகாசி திருவிழா முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்தை துவக்கி வைக்க அழைப்புகள் விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதாகவும் இளைஞர்கள் இது போன்ற பல்வேறு சிறப்பான செயல்களை மக்களுக்குப் பயன்படும் வகையில் தொடர்ந்து செய்ய வேண்டுமென
அத்திமரப்பட்டி இளைஞர்களுக்கு
தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்..

