===========-
தூத்துக்குடி, ஜூன் 2
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை களையும் கூட்டம் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. அப்போது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு மாநில துணைத் தலைவர் கோ.ஞா. யோபுசாலமோன் தலைமையில், நிறுவன தலைவர் எஸ்.பி. மாரியப்பன் முன்னிலையில் சாலையை சேதப்படுத்தும் நபர்கள் மீதும் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரி மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது :தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம், பஞ்சாயத்துக்குட்பட்ட சேர்வைக்காரன் மடம் & சாயர்புரம் செல்லும் பிரதான மெயின் ரோட்டில் 4 நபர்கள் தங்கள் வீட்டின் கழிவுநீர்களை மெயின் ரோட்டில் விடுவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் இதனால் பிரதான சாலைகள் பழுதாகி சுமார் ஒரு அடி ஆழத்திற்கு குழிகள் ஏற்பட்டு விபத்து நடக்கும் இடமாக மாறி உள்ளது. தொடர்ந்து அந்த இடங்களில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் உயிர்பலி ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது கடந்த மாதம் 10/05/25 அன்று மேற்கண்ட சாலை வழியாக நானும் எனது மனைவியும் சென்ற போது மேற்படி சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் அன்றாடம் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கை கால்கள் முறியும் நிலைத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களிலும் அதிக விபத்துகள் ஏற்படுகிறது இதுகுறித்து சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து செயலாளர், கிளர்க் என பலரிடமும் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சேர்வைக்காரன்மடம் டூ சாயர்புரம் செல்லும் மெயின்ரோட்டில் வீட்டின் கழிவுநீரை திறந்து விட்டு வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தியும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வரும் தனி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீர்படுத்தி சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தார். அப்போது பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன், இளைஞர் அணி சிவா, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடன் சென்றனர்.

