தூத்துக்குடி,மே,23.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (மே 22) கடைபிடிக்கப்பட்டது இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஆனையின்படி, பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி
தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்
எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் விஇ ரோட்டில் அமைந்துள்ள
தவெக மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார்
வனிதா, தந்தை ஜெக்சன், காளியப்பன் தாயார் மகேஸ்வரி, தந்தை கோபாலகிருஷ்ணன்,
கார்த்திக் தாயார் முருகேஸ்வரி, தந்தை முத்துப்பாண்டி, ஆகியோரும் பங்கேற்று தனது குழந்தைகள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர்கள் கண்ணீர் வடித்து கதறினர் இந்த நிகழ்வு அனைவரையும் சோகத்தில்
ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து தவெக வினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் பேசுகையில்
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்ற வேண்டும் எனவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்றும் துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினர் சார்பாகவும், தூத்துக்குடி பொதுமக்கள் சார்பாகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

ஆனால் மேற்கண்ட கோரிக்கைகளை திமுக அரசு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை மணிமண்டபம் அமைக்கப்படவில்லை அதுபோல் ஸ்டெர்லைட் ஆலை செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. ஆனால் இன்றுவரை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக அகற்ற அரசு முன்வரவில்லை, என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர் மேலும் அவர்கள் பேசியதாவது கடந்த 2018-ல் அப்போதைய அரசின் அலட்சியத்தால் 13 பேரின் உயிர் காவு வாங்கப்பட்டது. தற்போது வரை துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மேற்கண்ட அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது திமுக அரசு ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை வாக்குறுதியாக வைத்து ஆட்சிக்கு வந்த நிலையில், நான்கு வருடமாக எதுவும் செய்யவில்லை. ஆகையால்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமாக காவல் துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் திமுக அரசும் 4 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் வேதனையை புரிந்து கொள்ளாமல் நடந்து வருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை இன்னும் ஒரு ஆண்டுக்குள் தாங்கள் நிறைவேற்றாவிட்டால் வருகிற 2026 தேர்தலுக்குப் பிறகு தூத்துக்குடி மக்களின் வேதனையை போக்கும் வகையில் துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்த குடும்பத்தினர், மற்றும் தூத்துக்குடி பொதுமக்களில் ஒட்டுமொத்த கோரிக்கையை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நிறைவேற்றித் தருவார் என்றும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் திமுகவும் தூத்துக்குடி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக ஆவேசமாக பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ், மாவட்ட இணை செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோல்டன், ஸ்நோ ஷிப்பிங் உரிமையாளரும் தொழிலதிபருமான கிஷோர், மாநகர செயலாளர் அண்டோ, மாவட்ட பொருளாளர் சிவக்குமார்
விஜய் சுபாகர், வர்த்தக அணி அபிநயா மூர்த்தி, மைக்கேல், மதன், சதீஷ் குமார், மகேஷ், பாபு, கருப்பசாமி, மரியா, ஜீடி, திலகவதி, எம்.கே. பாலா, சுந்தர், மணிகண்டன், மயில், ராஜேஷ், மகாராஜா, செல்லப்பா, ரமேஷ் பாண்டி, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர்

