தூத்துக்குடி மே,23
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (மே 22) கடைபிடிக்கப்பட்டது இதனை முன்னிட்டு
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தூத்துக்குடி மாநகரில் உள்ள
பழைய மாநகராட்சி முன்பு,காமராஜ் கல்லூரி அருகில்,
அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஜங்ஷன்,
ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோடு,
முத்தையாபுரம் ஜங்ஷன்,ஆகிய 5 பகுதிகளிலும்,
மேலும், திரேஸ்புரம் பகுதி பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட,
நினைவேந்தல் நிகழ்விலும்,
பாத்திமா நகர் பகுதியில், அப்பகுதி பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்விலும்,
கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

