======
தூத்துக்குடி, மே, 21.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்
சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் அக்கிரி பரமசிவம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தமிழர் விடுதலைக் களம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது :
தமிழர் விடுதலைக்களம் அமைப்பின் தலைவராகவும், உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளேன்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் அவரது அண்ணன் தொழிலதிபர் முருகேசன் ஆகியோரை, சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களோடு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் பதிவு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றியும், தொகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களையும் நேரடியாக சந்தித்தும் சிறப்பாக மக்கள் பணி செய்துவருகிறார்.
அவரது அரசியல் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலை கடத்தலில் எம்.எல்.ஏ. சண்முகையா என்பவருக்கும், அவரது உடன்பிறந்த சகோதரர் முருகேசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போல் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு 9843739305, 8015176060 ஆகிய எண்களில் இருந்தும் வாட்ஸ் -அப் – தளங்களில் பரப்பி வருகின்றனர்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, அவரது சகோதரர் முருகேசன் அவர்களது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி வரும் அக்ரி பரமசிவன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோன்று பல அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்கள்
பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக அரசு கலை அறிவியல் கல்லூரி, நீதிமன்றம், பல்வேறு பள்ளிகளிலும் புதிய வகுப்பறை கட்டிடங்கள், பல்வேறு கிராமங்களுக்கும் புதிதாக பேருந்து சேவை வழித்தடங்கள் உருவாக்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளர்ச்சி பணிகள், மழை வெள்ள நீரிலிருந்து மக்களை காக்கவும், மழைநீர் விரைவாக வெளியேறிடவும் புதிய பாலங்கள், எண்ணற்ற கிராமப்புற சாலைகள், புதிதாக அரசு அலுவலக கட்டிட கட்டுமானங்கள் என பல்வேறு நலத்திட்ட பணிகளையும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா செய்திருக்கிறார். பின்தங்கி இருந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு துடிப்புடன் 24 மணிநேரமும் செயல்படுகிறார் எம்எல்ஏ சண்முகையா இதன் காரணத்தினால் இரண்டாவது முறையும் சண்முகையா எம்எல்ஏ வெற்றி பெற்று சிறப்புடன் மக்கள் பணி செய்து வருகிறார்.
தற்போது இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சீனியர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பணியாற்றி வருவதால் வருங்காலத்தில் அமைச்சர் பதவி கூட இவருக்கு வழங்கப்படலாம் என்ற ஒரு நிலைக்கு இவரது செயல்பாடு அமைந்துள்ளதால் எம் எல் ஏ சண்முகையா நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான பல்வேறு அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பும் சதி செயல்கள் நடைபெற்று உள்ளது அதன் வெளிப்பாடு தான் தொடர்ந்து இந்த அவதூறு பரப்பும் செய்திகள் சண்முகையா எம்எல்ஏ நற்பெயருக்கு கலங்கத்தை உருவாக்கும் வகையில் சிலர் சமூக வலைத் தளங்களில் பொய் செய்திகளை பரப்பி அமைதியை சீர்குலைக்க சதி செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களை இயக்குபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் களத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் லாரன்ஸ், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் மாரியப்பபாண்டியன், தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ரவி தேவேந்திரன் மாவீரர் சுந்தரலிங்கனார் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கவர்னகிரி சக்திமுருகன் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்றைய தினம் புகார் மனு அளித்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 500-க்கு மேற்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்து அவதூறு பரப்புகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தன இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்புகள் அதன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு திரளாக வந்து எஸ் பி யிடம் புகார் மனு அளித்ததால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

